நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு தவணைகள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குவது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, ஜனவரி மாதம் கூடி விவாதித்து ஒருமித்த கருத்தை எட்டிய பின்னரே முடிவெடுக்கப்படும்.
இதே போல பாப்கானுக்கு 18 சதவீத வரை வரிவிதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேக்கேஜ் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் பாப்கானுக்கு 5 சதவீத வரையும், பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிள் ஒட்டப்பட்ட பாப்கானுக்கு 15 சதவீத வரியும், கேரமல் வகை பாப்கானுக்கு 18 சதவீதம் வரியும் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
