பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஜஃபர்யப் ஜிலானி காலமானார். அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயலாளராக இருந்த ஜஃபர்யப் ஜிலானி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் லக்னோவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், ஆதாரவாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.