இந்தியாவில் மக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை போலவே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. மக்கள் அனைவரும் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 2.50 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது அவசியம். அப்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்டு என்பது அவசியமாகும். இந்த பான் கார்டு செயலிழந்து விட்டால் என்ன ஆகும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் மற்றும் சாதாரண சேமிப்பு கணக்கு தவிர வேறு எந்த கணத்தையும் பான் கார்டு இல்லாமல் தொடங்க முடியாது. டெபாசிட்டரி அல்லது செக்யூரிட்டிகளிலும் டீமேட் கணக்குகளையும் ஆரம்பிக்க முடியாது.

மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டை வாங்க விரும்பினால், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்ய இயலாது. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் எங்கேயும் நிறுவனத்தின் பத்திரம் அல்லது கடன் பத்திரங்களை வாங்க இயலாது.

ஆர்பிஐ பத்திரத்தை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வாங்க முடியாது.

ஒரே நாளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எதிலும் டெபாசிட் செய்ய முடியாது.

ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பில் கட்ட முடியாது.

எந்த வங்கியிலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது.

டிராஃப்ட் மற்றும் செக்குகளுக்கு வங்கியால் ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக செலுத்த முடியாது.

எந்த வங்கியிலும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு ஆண்டில் உங்களால் முதலீடு செய்ய முடியாது.

ஆயுள் காப்பீட்டு பிரீமியம் வடிவிலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்ய இயலாது.

பங்குகளை வாங்குவோ அல்லது விற்கவோ ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது.