
கரூர் மாவட்டம் பெரியகுளத்து பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேகப்பூர். இவரது மனைவி அர்ஜுனா பேகம் இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே வசிக்கும் பாட்டிக்கு உடம்பு சரியில்லை அவரை பார்த்து சொல்ல வேண்டும் என பேகம் தனது கணவரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஈரோடு- திருச்சி பயணிகள் ரயிலில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்த அஜினா பேகம் ரயிலில் இருந்து கீழே குதித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் படுகாயங்களுடன் சுயநினைவு இல்லாமல் அஜினா பேகம் மீட்கப்பட்டார்.
அவர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பேகத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஜேகப்பூர் தான் பேகத்தை கீழே தள்ளி கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.