தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கும் நிலையில் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பாமகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் நிலவி வருகிறது. அதாவது அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே மோதல்கள் நிலவும் நிலையில் நேற்று முன்தினம் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி பாமக கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்கள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் தற்போது எந்த பிரச்சினைகளும் இல்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் இன்று பாமக கட்சியின் சார்பில் அடுத்த மாதம் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பந்தக்காலை நட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணியிடம் பாஜக கூட்டணியில் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு அது தொடர்பாக இன்னொரு கூட்டத்தில் பதில் சொல்கிறேன் என்றார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்த நிலையில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்குமா இல்லையா என்ற சந்தேகம் அன்புமணியின் பதில் மூலம் தெளிவாகியுள்ளது.