
வக்ஃப் வாரிய திருத்த மசோதா முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மதச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலும் உள்ளது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இம்மசோதாவை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் போராட்டங்களை தவெக நடத்தத் தயார் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 3, 2025
“>
மத்திய பாஜக அரசு பிளவுபடுத்தும் அரசியல் மூலம் இஸ்லாமிய சமூகத்தை அச்சுறுத்தும் சூழல் உருவாக்கியுள்ளதாகவும், பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இஸ்லாமிய சகோதரர்களின் மனநிலையை பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜனநாயக, மதச்சார்பற்ற கொள்கைகளை புறக்கணிக்க முயல்வது நாட்டிற்கு ஆபத்தானது என்று அவர் குறிப்பிட்டார்.