அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அவருக்கு தண்டனை கிடைத்தால் தான் திருத்துவார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் நடவடிக்கையால் 13 இடங்களில் பாஜகவுக்கு டெபாசிட் பறிபோனதாக குற்றம் சாட்டிய அவர், அண்ணாமலைக்கு அதற்கான தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். 6 மாதங்கள் முன்பே நான் கூறினேன், தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் ஒரு பூஜ்ஜியம் தான் என்று. அது தற்போது நிரூபணமாகியுள்ளது.

அதே சமயத்தில் பிரதமர் மோடி அவர்கள் 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக வருவார் என்றேன், அதுவும் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவின் 14% வாக்கு என்பது வளர்ச்சி அல்ல என்றும், அது அசிங்கமானது எனத் தெரிவித்துள்ளார்