காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜகவில் இணைந்துள்ளேன் என விஜயதரணி தெரிவித்துள்ளார்..

தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில், பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் விஜயதரணி. கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த  நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதரணி.

இதையடுத்து பாஜகவில் இணைந்த பின் விஜயதரணி பேசியதாவது, பாஜகவில இணைந்தது மகிழ்ச்சி. காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜகவில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் பாதயாத்திரை தமிழக பாஜகவிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடி தலைமையில் என்னை போன்ற பெண்களுக்கு பாஜகவில் நல்ல எதிர்காலம் உள்ளது. மிகப்பெரிய தலைவர் பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெறும் வளர்ச்சியை கண்டுள்ளது பாஜகவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியில் இணைந்துள்ளேன்” என தெரிவித்தார்.