
லஞ்சம் கேட்டு கொடுக்காததால் போலீசார் தன்னை கைது செய்ததாக தாடி பாலாஜியின் மனைவி நித்தியா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் கைதாகி அவர் விடுவிக்கப்பட்டார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேச நித்தியா, கடைசிவரை பக்கத்து வீட்டுக்காரருடன் என்ன பிரச்சனை என்பதை தெளிவாக தெரிவிக்காமல் பெண்கள் மேம்பாடு மற்றும் பெண் தலைவர்களை பற்றி பேசி பாஜகவில் சேர போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது பக்கத்து வீட்டு பிரச்சனைக்கு புகார் அளிக்க வந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா பாஜகவில் சேரப் போவதாக கூறியது அனைத்து தரப்பினர் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்ணாமலை சிறப்பாக செயல்படுவதாகவும் பாஜகவில் சேர போவதாகவும் அவர் கூறியுள்ளார்.