பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன் என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜகவில் இணைந்த பிறகு பேட்டி அளித்த அவர், சிறுவயது முதலே காங்கிரசின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது. பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.