சமூக வலைத்தளங்களில் DMKவை தாக்கி வரும் நடிகை கஸ்தூரி BJPல் சேர உள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. எனக்கே தெரியாத விஷயம் தினமலருக்கு எப்படி தெரிந்தது என அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கஸ்தூரி. இது குறித்து x தளத்தில், ‘நான் எந்த கட்சியிலும் இல்லை, கட்சி சார்ந்த அரசியலை சிந்திக்கவில்லை. தினமலர் வெளியிட்டுள்ளது ஆருடமா, இல்லை சும்மா போட்டு வாங்கும் தந்திரமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.