மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர் வழியில் சாலை மார்க்கமாக பசும்பொன் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.