கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 10ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். அவர்களும் மும்முரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று முக்கிய வேட்பாளர்கள் உட்பட பலரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

தேர்தல் தேதி நெருங்கி வருவதை அடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி கர்நாடக மாநிலம் ஷிங்கோன் பகுதியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசி கிடைக்காது என குறிப்பிட்டார். கர்நாடக மக்களை மறைமுகமாக பாஜக மிரட்டுவதாக காங். கட்சியினர் நட்டாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.