நேற்று நள்ளிரவு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த தினம் கரூரில் உள்ள அமைச்சர், அவரது சகோதரரின் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து பாஜகவின் அடுத்த டார்கெட் “குட்டி செந்தில் பாலாஜி” போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தான் என்று அண்ணாமலை வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். Cash for Transfer Scam. அடுத்த திமுக ஃபைல்ஸில் சிவசங்கர் இருக்கிறார். சமீபத்தில் நடந்த பணிமாறுதல்களுக்கு ரு.12 கோடி பணம் வாங்கியுள்ளார். அவர் யாரிடம் பணம் வாங்கினார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது எனத் தெரிவித்தார்.