
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருவதால் இதனை ரசிப்பதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இணையத்தில் உள்ளது. இவ்வாறு வெளியாகும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சிங்கம் ஒன்று அமைதியாக அமர்ந்திருக்க அங்கு வரும் நாய்க்குட்டி தன்னுடைய நாக்கால் அதனை தடவி கொடுத்து சுகப்படுத்துகிறது. சிங்கத்திற்கும் அது பிடித்து போக இந்த பக்கம் கொஞ்சம் தடவி கொடு என்ற மாதிரி முகத்தை காட்டுகின்றது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Lion and dachshund have a very strange relationship pic.twitter.com/9HEILdLWiA
— B&S (@_B___S) August 4, 2023