இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) 2026 தொடருக்கான ஏலத்தில், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் பாகிஸ்தான் மீது இந்திய மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், காவ்யா மாறனின் இந்த அதிரடி முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை முன்பு கேலி செய்ததாகக் கூறப்படும் அப்ரார் அகமதுவை, ஒரு இந்திய உரிமையாளர் கோடிகள் கொடுத்து வாங்கியதை “வெட்கக்கேடானது” என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Finally, a Pakistani player has been picked by an Indian-owned franchise!
Sunrisers Leeds, led by owner Kavya Maran, saw Daniel Vettori express interest in mystery spinner Abrar Ahmed.
The franchise eventually won the bidding war against Trent Rockets, securing him for £190,000 https://t.co/o5SN3Q95MQ pic.twitter.com/gpgJFcuQmg
— Pavilion Post (@CricinsightsX) March 12, 2026
“>
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் காவ்யா மாறனுக்குச் சொந்தமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியைப் புறக்கணிக்கப் போவதாக (Boycott SRH) ரசிகர்கள் எக்ஸ் (X) தளத்தில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் கூட இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்து வரும் சூழலில், காவ்யா மாறன் எடுத்த இந்த வணிக ரீதியான முடிவு தேசப்பற்றுக்கு எதிரானது எனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
Indian fan should boycott SRH on IPL 2026. sorry Abhishek Sharma & Ishan Kishan.
Shame on Sunrisers for buying pakistani player Abrar Ahmed who hates India and spread anti Indian propoganda on social media.
Abrar Ahmed is a open hater of India unlike Bangladesh Mustafizur… https://t.co/HSnTeKY53m
— CricPal (@AnupPalAgt) March 12, 2026
“>
டிரென்ட் ராக்கெட்ஸ் அணியுடன் போட்டியிட்டு அப்ராரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் நிர்வாகம், இந்த எதிர்ப்புகளுக்குப் பிறகு தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா அல்லது அமைதி காக்குமா என்பது விளையாட்டு வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
