ஆசியக் கோப்பை T20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில், வீரர்கள் கை குலுக்காமல் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த நிலைக்கு போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப் தான் காரணம் என பாகிஸ்தான் குற்றச்சாட்டு முன்வைத்து, அவரை தொடரிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரியது. ஆனால், அந்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்துவிட்டது. இதனால், பாகிஸ்தான் தரப்பில் கடும் அதிருப்தி நிலவியது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 21) நடைபெறும் ‘சூப்பர்–4’ சுற்றுப் போட்டியிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இந்த முக்கியமான ஆட்டத்திற்கும் போட்டி நடுவராக ஆன்டி பைக்ராப் நியமிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியில், அவர் மீண்டும் நடுவராக இருப்பது புதிய விவாதங்களை கிளப்பும் வாய்ப்பு அதிகம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.