
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கியதாகக் கூறப்படும் இம்தியாஸ் அகமத் மக்ரே (23) என்ற இளைஞர், பாதுகாப்புப் படைகளிடமிருந்து தப்பித்து ஓட முயன்றபோது ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு படைகளின் தகவலின்படி, மக்ரே, குல்காம் மாவட்டத்தின் தங்க்மார்க் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கு உதவியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, போலீஸ் மற்றும் ராணுவத்துடன் இணைந்து அந்த மறைவிடத்துக்குச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை, வனப்பகுதியில் சில நிமிடங்கள் சுற்றிய பின், அருகில் யாரும் இல்லாத நேரத்தில், விஷ்வா ஆற்றில் அவர் குதித்துவிட்டார்.
J&K : कुलगाम में एक डेडबॉडी मिली है। उसकी पहचान इम्तियाज अमद मगरई के रूप में हुई है। अब एक ड्रोन वीडियो सामने आई है। इसमें वो एक नदी में कूदता दिखाई दे रहा है। प्रथम दृष्टया ये केस सुरक्षा बलों से बचने के लिए सुसाइड करने का लग रहा है।
महबूबा मुफ्ती ने X पर लिखा– मुझे स्थानीय… pic.twitter.com/k91jB3uSEl
— Sachin Gupta (@SachinGuptaUP) May 4, 2025
மேலே இருந்து எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சியில், அவர் திடீரென ஆற்றில் பாய்ந்ததும், சுறுசுறுப்பாக நீந்த முயன்றதும், பின்னர் வெகுவேகமாக ஓடிய நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதும் பதிவாகியுள்ளது. இந்த முழு காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு, அவரது மரணத்திற்கு பாதுகாப்புப் படைகள் காரணம் என கூறுவது தவறான தகவலாகும் என ராணுவம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.