தமிழகத்தில் பவர் டில்லர் மற்றும் விசை களை எடுப்பான்களை மானியத்தில் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஐந்தாயிரம் வேளாண் இயந்திரங்கள் வழங்க இலக்கு வைக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் பன்னீர்செல்வம், சிறு குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும் இதர விவசாயிகளுக்கு 40% மானியமும் வழங்கப்படும் எனவும் இதற்கு உழவன் செயலி மூலமாக பதிவு செய்யலாம் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.