
மகாராஷ்டிராவிற்கு அருகில் உள்ள தஹானு என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கடற்கரை கிராமமான கெல்வாடா அதன் சிக்கரி பழங்களுக்கு மிகவும் பிரபலமானது. இந்த சிக்கு பழங்களை நாம் சாப்பிடும் சப்போட்டா பழங்கள் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நகரமயமாக்கல் என்ற பெயரில் இந்த பழங்கள் மறைந்து விடாமல் பாதுகாக்க இந்த திருவிழா நடத்தப்படுகின்றது.
அதில் விவசாயத்தின் மூலமாக உள்ளூர் விவசாயிகள் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைய வைப்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பத்தாவது சிக்கோ திருவிழா ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் போர்டு பீச்சில் நடைபெறுகின்றது.