
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி அருகேயுள்ள கல்லம்பூர் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் 12-ம் படிக்கும் படிக்கும் எட்டு மாணவிகள் விஷம் கலந்த மிக்ஸரை எடுத்து சாப்பிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு மாணவியின் பையில் இருந்த மிக்ஸரை 8 மாணவிகள் சாப்பிட்டுள்ளனர். அதில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் மாணவிகளுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் அதில் எலி விஷம் கலந்திருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.