
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குல்தீப் யாதவ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் வகுப்பறையில் அமர்ந்து ஆபாச படம் பார்த்துள்ளார். இதனை 8 வயது மாணவன் ஒருவன் பார்த்த நிலையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து வகுப்பறையில் பேசிக்கொண்டு சிரித்துள்ளார்கள்.
இதனை குல்தீப் யாதவ் பார்த்த நிலையில் அந்த மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவனை இழுத்து சென்று சுவரின் மீது அவனை மோதி கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் ஆசிரியர் இது வழக்கு பதிவு செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.