அசாம் மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் ஜூலை 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் சில மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் மிதிவண்டிகள் வழங்குதல், வேளாண் பல்கலைக்கழகங்களிலும், செவிலியர் கல்லூரிகளிலும் 6 பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குதல் ,ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரிவு படுத்துதல் உள்ளிட்டது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுவதில்லை என்றும் மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதன்படி, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 60% மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு மட்டுமே ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. அதே சமயம் மாணவர்கள் 75% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..