நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 14 வது தவணை பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விவசாயிகளின் கணக்கில் பணம் செலுத்தப்படும் என தெரிகிறது. இந்நிலையில் பி எம் கிசான் திட்டத்தின் பயனாளிகளின் நிலையை பார்க்கும் முறையில் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் பி எம் கிசான் என்ற மொபைல் செயலையும் அரசால் தொடங்கப்பட்டுள்ளது. நீங்கள் பயனாளியின் நிலையை பார்க்க விரும்பினால் அதற்கு உங்களுக்கு பதிவு எண் தேவைப்படும். ஓடிபி மற்றும் கைரேகை பதிவு தேவையில்லை. மோசடிகளை தடுக்கும் விதமாக ஈ கேஒய்சி நிறைவு செய்யும் நோக்கத்தில் வேளாண் அமைச்சகம் பி எம் கிஸான் மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக ஈ கேஒய்சி சரி பார்ப்பை முடிக்க முடியும். இதன்மூலம் கேஒய்சி செய்த பிறகு உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் மற்றும் கைரேகை தேவையில்லை.