தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் சில போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றன. அதன்படி தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பாக செப்டம்பர் நான்காம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மலேசியா நாட்டிற்கு 21 மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் மற்றும் போட்டிகளில் மாநில அளவில் தேர்வான 21 மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்கின்றனர். இவர்களுடன் வழிகாட்டிகளாக ஆறு ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் இணை இயக்குனர் ஆகியோர் செல்கின்றனர். செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு புறப்படும் மாணவர்கள் ஒன்பதாம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.