சென்னையில் பள்ளி சிறுமிகள் பலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாலியல் தொழில் ஈடுபடுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் .இந்த நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அப்பாவி ஏழை சிறுமிகளிடம் பணத்தாசையை காட்டியுள்ளனர்.
பின்னர் அவர்களை பாலில் தொழில் ஈடுபட வைத்துள்ளனர். இதனையடுத்து பெண் உட்பட ஏழு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தார்கள். இதில் நதியா, ராமச்சந்திரன் தண்டபாணி, மாய ஒலி ஆகியோரை சென்னை மாநகர காவல் ஆணையர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
