அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் டிம்பர்லைன் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 17 வயது சிறுமி படிக்கிறார். இந்த நிலையில் 17 வயது சிறுமியின் தாய் சாஹ்ரா, அவரது தந்தை இஹ்சான் அலி ஆகியோர் தங்களது மகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக சிறுமியை ஈராக்கிற்கு விமானத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால் அந்த சிறுமி அவர்களிடமிருந்து தப்பித்து பள்ளிக்கு வந்து விட்டார்.

இதனால் கோபமடைந்த சிறுமியின் தந்தை பள்ளிக்கு வந்து தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். சக மாணவர்களின் உதவியுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். தப்பியோட முயன்ற சிறுமியின் தாயையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.