
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஜெஸ்ரில் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் காருக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வழக்கம் போல் சிறுவனை பள்ளி வாகனத்தில் அழைத்து செல்லாமல் காரில் அழைத்துச் சென்ற நிலையில் காரில் மறந்து விட்டதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். இந்த சிறுவனின் பெயர் அஸ்வின் (7).
இந்நிலையில் சிறுவனை காரில் அழைத்துச் சென்ற நிலையில் காருக்குள் வைத்து அப்படியே பூட்டி விட்டதால் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் இந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளரின் கணவர் சங்கரநாராயணன், அவரது மகன் மகேஷ் குமார் மற்றும் கார் ஓட்டுனர் ஜான் பீட்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.