
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே சரஸ்வதி நகர் உள்ளது. இங்கு ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவர் எல்கேஜி படித்து வந்தார். இந்த சிறுமி பள்ளியில் இருக்கும் போது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக வந்தது. இதனால் பயந்து போன சிறுமி ஓடிய நிலையில் அந்த சிறுமியை ஒரு நாய் கடித்தது.
அதோடு கன்னத்தில் முகத்தில் எல்லாம் கடித்து குதறியது. இந்த சிறுமி முகம் முழுவதும் இரத்த காயங்களுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பெற்றோருக்கு தகவல் தெரிந்த நிலையில் அவர்கள் சிறுமியை பார்த்து கதறி துடித்தனர். இந்நிலையில் பரமக்குடியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக ஊராட்சி நிர்வாகம் அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வலுத்து வருகிறது.