
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025-ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு கல்விக்கான 2000 கோடி நிதியை விடுவிக்காத நிலையில் தமிழக அரசு தங்களுடைய சொந்த நிதியிலிருந்து விடுவித்துள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள நிலையில் ஒருபோதும் மும் மொழிக் கொள்கையை மட்டும் ஏற்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 2,152 கோடியை தமிழ்நாடு அரசு கொடுக்கும் என்ற உறுதியுடன் பள்ளி கல்வித்துறைக்காக ரூபாய் 46, 767 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கு முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சருக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.