மிசோரம் மாநிலத்தில் பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2991 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உள்ள ஆட்சேர்ப்பு விதிகளின்படி காலியான பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

குறிப்பாக தகுதியின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை அரசு தொடங்க உள்ளதாகவும் முதலில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.