மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரராக இருந்தாலும் பைவ் ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டது கிடையாதாம். அவருடைய மறைவுக்குப் பிறகு அவரது நண்பர்கள் மற்றும் அவருடன் பழகிய பலரும் விஜயகாந்த் பற்றி ஏன் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இன்று சினிமா நடிகர்கள் பலரும் விளம்பர படங்களில் நடிக்கின்றனர். பல வருடங்களுக்கு முன்பே பிரபல குளிர்பான நிறுவனம் ஒன்று அவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து விளம்பர படத்தில் நடிக்க அழைப்பு விடுத்த நிலையில் விஜயகாந்த் அதனை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் பல கோடி ரூபாய் சம்பாதித்தாலும் பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் விருந்து வைத்தால் விஜயகாந்த் அங்கு சாப்பிட மாட்டார்.