
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யா. 35 வயதான இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பணம் சம்பாதிக்கவும் ,உல்லாசமாக வாழ்க்கை வாழவும் ஆண்கள் பலரை திருமணம் செய்து ஏமாற்றி நகை ,பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் .இவர் குறிப்பாக அரசு அதிகாரிகள், வசதி படைத்த திருமணமாகாத வாலிபர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் .திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சத்யாவோடு பழக்கம் ஏற்பட்டது. தனக்கு திருமணமானதை மறைத்து அந்த வாலிபரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.
பிறகு சத்யா மீது சந்தேகம் அடைந்த அந்த வாலிபரின் உறவினர்கள் ஈரோடு சென்று விசாரித்த பொழுது அவர் பல ஆண்களை ஏமாற்று திருமணம் செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த வாலிபரின் தாத்தா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் சத்யாவை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் இவர் ஐம்பத்தி மூன்று பேரை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது .
இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையைடுத்து தனிப்படை போலீசார் புதுச்சேரி சென்று சத்யாவை மடக்கிப் பிடித்து கைது செய்தார்கள். இந்த நிலையில் சத்யாவிடம் போலீசார் நடத்தி விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது பல ஆண்களோடு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கும் பொழுது சத்யா ரகசிய கேமரா மூலமாக வீடியோ எடுத்துள்ளார் .
அதன் பிறகு அந்த ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்து உல்லாசமாக இருந்த ஆண்களிடம் நகை பணம் பறித்துள்ளார். மேலும் அவ்வப்போது செலவுக்கு பத்தாயிரம், 20 ஆயிரம் என பணம் கேட்டுள்ளார். ஆபாச வீடியோ காட்சி வைத்து மிரட்டியதால் பலரும் பயந்து போய் அவர் கேட்கும் பணத்தை கொடுத்துள்ளனர்.