மெட்ரோ ரயிலுக்காகக் காத்திருந்த ஒரு நபர், பற்களைக் காட்டி புன்னகைத்தபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ரயில் வர அது நிற்பதற்கு முன்பாகவே கதவு அருகே சென்று தொங்கிக் கொண்டே நகர்ந்தார். கதவு திறந்தவுடன் முதல் ஆளாக உள்ளே ஓடி, இருக்கையை சட்டென பிடித்துக் கொண்டார். இருக்கையில் அமர்ந்தவுடன், மீண்டும் அதே பெருமித சிரிப்புடன், தான் ஒரு பெரிய வெற்றி பெற்றது போல பற்களைக் காட்டி சிரித்தார். இந்த காட்சி நெடிசன்களுக்கு வேடிக்கையாக அமைந்தது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி, பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. ஒரு சாதாரண மெட்ரோ பயணம் இப்படி ஒரு நகைச்சுவைத் தருணமாக மாறியது ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க்கையில் இதுபோல வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது முக்கியம் என்றாலும், இவரது இந்த சிரிப்பு காணொளியை வைரல் ஆக்கிவிட்டது.