டெல்லி பல்கலைக்கழகத்திற் அருகே உள்ள லட்சுமிபாய் கல்லூரி பகுதியில், பெண் மாணவிகளை ரகசியமாக வீடியோ எடுத்ததோடு, அவற்றில் அகாரமற்ற கமெண்ட்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
“I Love You Meri Jaan” போன்ற ஆபாசமான வசனங்களோடு மாணவியரை குறிவைத்து வீடியோ போட்டு வந்துள்ள இந்த நடவடிக்கையை ஒரு இளைஞர் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அந்த ஆட்டோ டிரைவரை நேரில் தேடி சென்று, வீடியோக்களை மக்களுக்கு காட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். ஆனால் டிரைவர் தன் தவறை ஏற்க மறுத்ததால், அந்த இளைஞர் சற்றே அடித்துவிட்டு, 112 என்ற அவசர எண்னை அழைத்து போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.
>An auto rickshaw 🛺 driver used to harass and secretly record videos of women passing vulgar comments and post it on instagram.
> A guy saw those videos on instagram and gave him proper treatment & made sure he couldn’t stand on his legs. pic.twitter.com/O87JrkFMuV
— Matakti aankhein (@prettymoon_23) September 27, 2025
இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. “பெண்கள் பொதுவிடங்களில் கூட பாதுகாப்பற்ற நிலை” என பொதுமக்கள் ஆவேசமாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
போலீசார் தற்போது இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கி நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர். பெண்களை குறிவைக்கும் இணையத்தள பாலியல் சீண்டல்களுக்கு எதிராக, இன்னும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் உண்டு என்பதே சமூகத்தின் கோரிக்கையாக உள்ளது.
