மலையாள சினிமாவின் பிரபல நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கில் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான திலீப் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கார் டிரைவர் பல்சர் சுனில் ஜாமினில் வெளியே வந்து மலையாள தனியார் தொலைக்காட்சி நிருபரிடம் கூறியதாவது, நடிகர்கள் சொல்லித்தான் நடிகையை பலாத்காரம் செய்ய திட்டம் தீட்டினோம். அதற்கு 1.5 கோடி ரூபாய் தருவதாக திலீப் கூறினார்.
ஆனால் இன்னும் 80 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது. தேவைப்படும் போதெல்லாம் அவரிடம் இருந்து பணம் வாங்கி இருக்கிறேன். பலாத்காரம் செய்யும்போது நடிகையிடம் நாங்கள் விவரத்தை கூறினோம்.
அப்போது அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டாம். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன் என கூறினார். அந்த நடிகை பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்பே மலையாள சினிமாவில் மேலும் பல நடிகைகள் இதேபோல பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என பல்சர் சுனில் கூறினார்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் மறு விசாரணை நடத்த கேரளா எதிர்கட்சி தலைவர் சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
