உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் பெண் பிரமுகர் ஒருவருக்கு தொடர்ந்து சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் வந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சாப்ரோன் ராஜேஷ் சிங் என்பவர் அந்த இளம் பெண்ணுக்கு தொடர்ந்து சமூக வலைதளம் மூலமாக பாலியல் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். குறிப்பாக பலாத்காரம் செய்த கர்ப்பமாக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்த பெண் தன் ஆதரவாளர்களுடன் ராஜேஷ் ஙனசிங் வீட்டிற்கே சென்றார்.

அங்கு அவரின் மனைவி மற்றும் மகன் கண் முன்னே அந்த நபரை அடித்து வெளுத்தனர். அந்தப் பெண் கோபத்தில் அவரை சரமாரியாக அடித்த நிலையில் ராஜேஷ் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் கதவை பூட்டிக்கொண்டு தப்பித்து விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் கடந்த 4 வருடங்களாக அவர் தொடர்ந்து தனக்கு பலாத்காரம் மிரட்டல் விடுத்ததால் தான் அவரை அடித்ததாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.