ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு பால் தொடர்பான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் பசுந்தீவனத்தை சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. குறைந்து வரும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஆவின் அதிகாரிகள் அகத்தி கீரை, சூபாபுல் போன்ற தீவன மரங்களை வளர்க்கும் திட்டத்தை முன்வைத்துள்ளதாக அறியமுடிகிறது. மேய்க்கால் புறம்போக்கு &கூட்டுறவு சங்கங்களின் காலி நிலங்களில் இதற்கான பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.