தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரமானது கடந்த நான்காம் தேதி முதல் தொடங்கியது. கோடை காலத்தில் உக்கிரமான வெயில் இந்த காலத்தில் தான் பதிவாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லாமலேயே இருந்தது. ஆனால் போக போக அதனுடைய கோரத்தாண்டவத்தை காட்ட தொடங்கியது. அதிலும் அக்னி நட்சத்திரம் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் ஆனது இன்றுடன் முடிவடைய உள்ளது. இதற்கு பிறகு மேலும் தாக்கம் குறையுமா என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ஆன அக்னி நட்சத்திரம் விடை பெற்றாலும் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு வெயிலின் தாக்கம் இயல்பை விட சற்று அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் வருகிற 31 மற்றும் 1 ஆம் தேதிகளில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.