சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது அவர்களை பணிசெய்ய விடாமல் கரூரிலுள்ள திமுகவினர் தடுத்ததோடு அவர்கள் சென்ற வாகனத்தை உடைத்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

9 இடங்களில் வருமான வரித் துறை சோதனை தடுக்கப்பட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்து போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தியதாக குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித் துறையினர் தாக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு விசாரணை உகந்தது அல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை மனுவை திருப்பி அனுப்பியது.