இந்தியாவில் கடந்த 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள முன்ஜெலி மாவட்டத்திலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக கட்சியின் எம்எல்ஏ புன்னுலால் போலே என்பவர் கலந்து கொண்டார். அதேபோன்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்பி கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது அமைதி மற்றும் சுதந்திரம் போன்றவற்றை நிலைப்படுத்தும் விதமாக சமாதான புறா பறக்க விடப்பட்டது. அப்போது எம்எல்ஏ பறக்க விட்டபோது மேலே பறந்த சென்றது.

ஆனால் எஸ்.பி பறக்கவிட்ட புறாவும் மேலே பறக்காமல் திடீரென கீழே விழுந்துவிட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகிவரும் நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி கடிதம் எழுதியுள்ளார். மேலும் நோய்வாய்ப்பட்ட புறாவை வழங்கியதால் தான் அந்த புறா பறக்காமல் கீழே விழுந்து இறந்துள்ளது. நாட்டின் சுதந்திர தின விழா போன்ற முக்கிய விழாவில் இப்படி செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி வலியுறுத்தியுள்ளார்.