“பரிதாபங்கள்” என்ற யூடியூப் சேனலை சுதாகர் மற்றும் கோபி ஆகிய இருவரும் நடத்தி வருகின்றனர். இவர்களின் காமெடி வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பரிதாபங்கள் கோபிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது. யமுனா என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ‘பரிதாபங்கள்’ கோபி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ”தகப்பனானேன்.. அழகிய மகள் பிறந்துள்ளாள்” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.