
கொல்கத்தாவில் நடந்த பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு குறித்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராய், தனது வாக்குமூலத்தில் அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையும், சஞ்சய் ராயின் வாக்குமூலமும் இணைந்த பின்னர், சிபிஐ அதிகாரிகள் அவரது மனோதத்துவ நிலையை ஆய்வு செய்துள்ளனர்.
இதில், சஞ்சய் ராய், வக்கிரமான பாலியல் பழக்கத்திற்கு அடிமையாகி, மிருகம் போல நடத்திக்கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர், எந்தவிதமான உணர்ச்சியின்றியும், சற்றும் குற்றவுணர்ச்சி இல்லாமல் நிதானமாகவே பதிலளித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அவரது மனநிலையைப் பற்றிய கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.