வாட்ஸ் அப் நிறுவனமானது சமீப காலமாகவே பயனர்கள் உடைய நலனை கருத்தில் கொண்டு ஏராளமான அப்டேட்களை வழங்கி வருகிறது. பாதுகாப்பு மீறப்படும் பட்சத்தில் whatsapp கணக்கு மொத்தமாக தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் ரகசிய வீடியோ அல்லது புகைப்படங்களை பகிரும்படி view once  முறையை வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருந்தது. இதன் மூலமாக ஒருமுறை மட்டுமே பயனர்கள் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும் .

மேலும் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை கேலரியில் சேமிக்க முடியாது. அதன்பிறகு இந்த அப்டேட்டை whatsapp திரும்ப பெற்றது . இந்த நிலையில் தற்போது மீண்டும் டெஸ்க் டாப் பயனர்களுக்காக வாட்ஸப் நிறுவனம் ஒருமுறை மட்டுமே பார்க்கும் view once வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை விண்டோஸ் மற்றும் மேக் பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.