ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் அவமானகரமான சம்பவம் ரயிலில் நடந்துள்ளது. பயணிகள் ரயிலில் ஒரு மைனர் (சிறுமி) பெண்ணுடன் ஒரு நபர் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அந்த நபர் கையும் களவுமாகப் பிடிபட்டதுடன், ஒரு சக பயணி அவரது அருவருப்பான செயல்களை வீடியோவில் பதிவு செய்துள்ளார். சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தபோதும், ஒரு நபர் சிறுமியின் அருகில் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் காணலாம். அவர் சிறுமியுடன் உரையாடுவது போல் நடித்து, அவளை தகாத முறையில் தொட முயல்கிறார். ஆனால், மற்றொரு பயணி அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இருப்பினும், சம்பவம் நடந்த இடமும் ரயில் குறித்த விவரங்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. சம்பவத்தின் போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் செயலை மறைக்க முயன்று, வீடியோ எடுத்து கொண்டிருந்த பயணியுடன் விவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதில் தனது தவறை மறைமுகமாக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பல நெட்டிசன்கள் அந்த நபரின் அநாகரீக செயலை கடுமையாக கண்டித்துள்ளனர். சிலர், “இத்தகைய வக்கிரமான எண்ணம் கொண்டவர்கள் தான் சமூகத்தில் பெண்களை பாதுகாப்பற்றவர்களாக மாற்றுகிறார்கள். இவர்களுக்கு கடுமையான தண்டனை அவசியம்” எனக் கூறியுள்ளனர். இந்த வீடியோ X=தளத்தில் @Prajapat204 என்ற பயனரால் பகிரப்பட்டது. அவர் பதிவிட்ட உரையில், “இது ஒரு பொது ரயில் பெட்டியில் நடந்த சம்பவம். கண்ணாடி அணிந்த நபர் தனது மகளின் வயதிலான சிறுமியை அருவருப்பாக தொட முயன்றார். அருகில் இருந்த சிறுவன் அதை வீடியோவாக பதிவு செய்தது. இத்தகைய செயல்கள் சமூகத்தின் களங்கமாகும்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ போலீஸ் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கடும் கோபம் வெளியிட்டு வருகின்றனர்.