
மும்பையில் ஓலா காரில் பயணம் செய்த 50 வயது நபருக்கு நேர்ந்த கொடுமையை பற்றி அவருடைய மகன் ரெடிக்ட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய தந்தை மும்பையின் கிழக்கு பகுதியில் இருந்து புனேவுக்கு செல்ல ஓலா கார் புக் செய்திருந்தார். என்னுடைய தந்தை ஒரு பாதையில் செல்லுமாறு சொன்னபோது அதனை ஓலா டிரைவர் ஏற்க மறுத்து வேறு பாதையில் சென்றுள்ளார். அதன்பிறகு ஏசி போடுமாறு என்னுடைய தந்தை கூறிய நிலையில் அதற்கும் அந்த ஓட்டுனர் மறுத்துவிட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோபத்தில் அந்த டிரைவர் என்னுடைய தந்தையை அடித்தார். இதில் என் தந்தைக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவரும் பதிலுக்கு அடித்தார். இந்த பிரச்சனை தீவிரமான நிலையில் கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.