இன்றைய காலகட்டத்தில் சிறிய பூக்கடை முதல் பெட்டிகள் பெட்டிக்கடை வரை யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பயன்பாடுகளுக்குமே ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் முறையை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை நேரடியாக பணம் கொடுத்து வாங்குவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதனால் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெறுவதற்கு qr கோடு மற்றும் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியை கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்க எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கான வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் இருக்கும் திரையில் பயணிகள் தாங்கள் செல்லும் இடத்தை தேர்வு செய்து பிறகு அதற்கான கட்டணத்தை கியூ ஆர் கோடு மற்றும் UPI மூலம் செலுத்திக் கொள்ளலாம். இந்த டிக்கெட் தமிழ், மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிள் பிரிண்ட் செய்யப்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.