IND ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அக்னிபத் திட்டம் செப்டம்பர் 2022 முதல் செயல்படுத்தபட்டது.

இந்திய முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் பணிபுரியலாம். இதற்கு முதலில் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும். ஆனால், தற்போது நுழைவுத்தேர்வு (CEE) என்ற எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் பின் உடற்தகுதி தேர்வு நடைபெறுமாம். இதனால். 6 பிரிவு அக்னி வீரர் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் முதலில் எழுத்துத்தேர்வை எழுதும்படி கூறப்பட்டுள்ளது.