தமிழகத்தில் வார விடுமுறை நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னை கீழாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவை க்குச் செல்ல 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நாளை 290 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு செல்ல இன்றும், நாளையும் 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதையடுத்து பெங்களூர், திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளுக்கு செல்ல 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர். மேலும் www.tnstc.in என்ற செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.