
விஜய் டிவியில் சமீபத்தில் முடிந்த தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் அஸ்ரிதா. அம்மா அப்பா என்ற சீரியல் மூலம் தனது நடிப்பை தொடங்கிய இவ்வாறு கனா காணும் காலங்கள், தேன்மொழி பி ஏ, நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் தமிழும் சரஸ்வதியும் என அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்துள்ளார். சீரியலை தாண்டி இவர் தெகிடி, சில நிமிடங்களில், என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அடித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் சந்தித்த பெரிய பிரச்சனை குறித்து மனம் திறந்து உள்ளார்.
அதாவது தனது 23 வயதில் நடந்த விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய்விடும் எனவும் இனி நடக்கவே முடியாது, உயிர் வாழவே முடியாது, இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு 10 சதவீதம் வாய்ப்பு தான் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தன்னுடைய அப்பா மற்றும் தனது மன தைரியத்தின் காரணமாக ஒரு மாதத்திற்குள் கேமரா முன் நின்றதாகவும் தனது வாழ்க்கையில் நடந்த பயங்கரமான விஷயம் எனவும் இது குறித்து அவர் கூறியுள்ளார்.